உள்நாட்டு செய்திகள்

சீ.விக்னேஸ்வரன், தாக்கல் செய்த ஆட்சேபனை மேன்முறையீட்டு நீதிமன்றினால் நிராகரிப்பு…



வட மாகாண முதலமைச்சர் சீ.விக்னேஸ்வரனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், விக்னேஸ்வரனினால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனை மேன்முறையீட்டு நீதிமன்றினால் இன்று(13) நிராகரிக்கப்பட்டுள்ளது.

அவமதிப்பு வழக்கின் விசாரணைத் திகதியை குறிப்பதற்கு எதிர்வரும் 15ம் திகதி வரையில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டதாக எமது செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.

வட மாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரனை மீள அந்த பதவியில் நியமிக்க உத்தரவிட்டு மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுத்த கட்டளையை நிறைவேற்றத் தவறிய நிலையில், விக்னேஸ்வரனுக்கு எதிராக டெனீஸ்வரனினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழை

wpengine

வஸீம் தாஜுடீனின் மரணம் கொலை – நீதிமன்றில் அறிவிப்பு

wpengine

சீ.ஐ.டி இடம் வாக்குமூலம் அளிக்க தயாராக உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவிப்பு…

wpengine