உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்வணிகம்

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எதிர்வரும் 15ம் திகதி இலங்கைக்கு..



கால தாமதமான கடனுதவி தொடர்பிலான கலந்துரையாடலின் பொருட்டு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எதிர்வரும் 15ம் திகதி இலங்கை வரவுள்ளனர். 

கடந்த ஒக்டோபர் மாதம் 26ம் திகதி நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலை காரணமாக நாணய நிதியம் வழங்கவிருந்த ஆயிரத்து 500 மில்லியன் டொலர் நிதியின் ஐந்தாவது தவணை கைவிடப்பட்டது. அந்த தொகை ஆறு தவணைகளாக வழங்கப்படவிருந்தது. நான்கு தவணைகளில் 760 மில்லியன் டொலர் தற்போதைய நிலையில் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஐந்தாவது தவணைக்குரிய நிதியை வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் கடந்த ஒக்டோபர் மாதம் 29ம் திகதி இடம்பெறவிருந்தது. எனினும் நாட்டில் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசாங்கம் ஒன்று இல்லாமை காரணமாக அந்த கலந்துரையாடல் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று முதல் 3 1/2 மணித்தியாலங்களுக்கு மின்விநியோகம் தடை (Update)

wpengine

மோட்டார் வாகனங்களை பதிவு செய்யும் போது புதிய சட்டதிட்டங்கள் அமுலுக்கு..

wpengine

3ம் தவணைக்காக பாடசாலைகள் திறப்பதற்கான கால மாற்றம்

wpengine