உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை…



நாட்டின் கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படுவதற்கான உயர் சாத்தியம் காணப்படுகின்ற தாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு, ஊவா, வடக்கு, மற்றும் வடமத்திய, மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் எனவும், ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றர் அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மாகாணத்திலும் அனுராதபுரம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

விண்வெளித் தகவல்களிலேயே வரலாற்றில் முதல் முறையாக பூமி அளவில் இருக்கும் 7 புதிய கோள்கள்…

wpengine

அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணத்தில் மாற்றம்..

wpengine

ஆனமடுவ உணவக தாக்குதல் – மூவர் கைது…

wpengine