உள்நாட்டு செய்திகள்வணிகம்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய வரவு windows – 1௦



கணணி உலகின் புதிய வரவான மைக்ரோசாப்டின் விண்டோஸ்-10 (Microsoft Windows – 1௦) பதிப்பு இன்று புதன் (29) வெளியாகிறது. பல்வேறு அதிவேக, நவீன அம்சங்களை கொண்ட இந்த பதிப்பை ஏற்கனவே விண்டோஸ்-7, 8 வைத்திருப்பவர்கள் இலவசமாக அப்டேட் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, விண்டோஸ் நிறுவனத்தின் அதிகாரபூர்வ அனுமதியுடன் விண்டோஸ்-7, விண்டோஸ்-8, விண்டோஸ்-8.1 மாடல் கம்ப்யூட்டர்கள் மற்றும் விண்டோஸ் 8.1 ஸ்மார்ட் போன்களை வைத்திருப்பவர்கள் விண்டோஸ்-10 பதிப்பில் உள்ள அனைத்து நவீன தொழில்நுட்ப வசதிகளையும் இலவசமாக தரம் உயர்த்திக் கொள்ளலாம் என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

விண்டோஸ்-7 பதிப்புக்கு பிறகு வெளியான விண்டோஸ்-8 பெரிய அளவில் மக்களிடையே வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து, விண்டோஸ்-9 வெளியாகவில்லை. சுமார் மூன்றாண்டுகள் இடைவெளிக்கு பிறகு இன்று வெளியாகும் விண்டோஸ்-10 பதிப்பில் பல்வேறு வகையான நவீன அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

(riz)

 

 

 

Related posts

பரீட்சைகள் திகதிகள் தொடர்பில் தீர்மானம் இன்று

wpengine

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு..

wpengine

இலங்கை தேசத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் – பிரதமரின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

Azeem Kilabdeen