உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பிரிகேடியர் பிரியங்க பொர்னாண்டோ’வுக்கு எதிராக வெஸ் மினிஸ்டர் நீதிமன்றில் வழக்கு..



கழுத்தை அறுக்கப்போவதாக, லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பொர்னாண்டோ சைகை மூலம் வெளிப்படுத்தியமை தொடர்பில் புலிகளது டயஸ்போராவ அமைப்பானது வெஸ் மினிஸ்டர் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கினை ஜனவரி மாதம் 21ம் திகதி முதல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள குறித்த நீதிமன்றம் நேற்று(17) தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வழக்கின் முறைப்பாட்டாளராக லண்டன் இல் உள்ள பிரதான புலிகள் நடவடிக்கைளை மேற்கொள்ளும் மஜூரன் சதானந்தன் எனப்படுபவரே தாக்கல் செய்துள்ளதோடு, சாட்சியாளர்களாக பல்லிய குருகே மற்றும் வினோத் பி பிரியந்த பெரேரா ஆகிய இருவரும் பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் சிரேஷ்ட இராணுவ அதிகாரி ஒருவருக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை இதுவே முதல் தடவை என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த பெப்ரவரி மாதம் லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு முன்னால் இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களை நோக்கி கழுத்தை அறுக்கப்போவதாக, லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பொர்னாண்டோ சைகை மூலம் வெளிப்படுத்தியிருந்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அரிசி ஆலை உரிமையாளர்களை அழைத்து அவர்களுக்கு இலாபமீட்ட வழியமைத்து கொடுத்த ஜனாதிபதி அனுர குமார

wpengine

ரஞ்சன் ராமநாயக்க கைது

wpengine

ஜனாதிபதி பிரித்தானியா மற்றும் பிரான்ஸூக்கு விஜயம்..!

wpengine