கேளிக்கை

காதலியுடன் விரைவில் திருமணம் – விஷால் அறிவிப்பு…


ஆந்திராவை சேர்ந்த அனிஷாவை காதலிப்பதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்யவிருப்பதாகவும் விஷால் கூறியுள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்க தலைவர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகங்கள் கொண்ட நடிகர் விஷால் தமிழ்திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருகிறார்.

விஷாலிடம் திருமணம் பற்றி கேட்ட போது, நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிந்ததும்தான் திருமணம் செய்வேன் என்றும், நடிகையை காதலித்து வருவதாகவும் அவரையே திருமணம் செய்வேன் என்றும் கூறிவந்தார்.

தற்போது முதல் முறையாக அவரே தனது திருமண தகவலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளார். மணமகள் பெயர் அனிஷா ரெட்டி. ஆந்திரா – தெலுங்கானா மாநில தலைநகரான ஐதராபாத்தைச் சேர்ந்தவர்.

எனக்கும் அனிஷா ரெட்டிக்கும் திருமணம் என்ற தகவல் உண்மைதான். இது காதல் திருமணம் என்று கூறியுள்ளார். திருமண திகதி முடிவு செய்யப்படும் என விஷால் கூறியுள்ளார்.

நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பின்புதான் எனது திருமணம் நடக்கும் என்று கூறினேன். அதில் மாற்றம் இல்லை. கண்டிப்பாக நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கப்படும். அதன்பிறகு அனிஷாவை திருமணம் செய்வேன். திருமணம் சென்னையில் தான் நடக்கும் என்று கூறியுள்ளார்.

Related posts

சர்கார் படப்பிடிப்பு நிறுத்தம்…

wpengine

அல்லு அர்ஜுனுக்கு கொரோனா

wpengine

தோனியின் ஆட்டத்தினை கான வரும் தேவதை..

wpengine