உள்நாட்டு செய்திகள்

நாடு முழுவதும் வரண்ட வானிலை…


நாடு முழுவதும் வரண்ட வானிலையுடன் கூடிய நிலைமை தொடர்ந்து நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெரும்பாலான பிரதேசங்களில் இரவு மற்றும் காலையில் குளிரான நிலைமை தொடர்ந்து நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாக்கக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுகின்றது.

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

Related posts

வரட்சியான காலநிலை – சில வனப்பகுதியில் காட்டுத்தீ

wpengine

UPDATE – சிறுமி மீது கனரக வாகனம் மோதுண்டதில் சிறுமி பலி.. போக்குவரத்து வழமைக்கு..

wpengine

தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முக பரீட்சை…

wpengine