உள்நாட்டு செய்திகள்

நாடு முழுவதும் சீரான வானிலை…


நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்து நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும் கிழக்கு மாகாணத்திலும் மாத்தளை மற்றும் பதுளை மாவட்டங்களிலும் சிறிதளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கை யில் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் குறிப்பாக வடக்கு வடமத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களில் ஓரளவு குளிரான வானிலை தொடர்ந்து நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் புத்தளம், கேகாலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

Related posts

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் எதிர்வரும் பெப்ரவரி 07ம் திகதியுடன் நிறைவுக்கு..

wpengine

பங்களாதேஷ் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா

wpengine

குருநாகல்-கண்டி பிரதான வீதியில் தாழிறக்கம் – பயணிகள் அவதானமாக செல்லுமாறு கோரிக்கை

wpengine