உள்நாட்டு செய்திகள்

களுத்துறை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் கைது…


களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட – தொட்டுபல சந்தியில் கடந்த முதலாம் திகதி இரவு இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் பயாகல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் களுத்துறை – நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் எழுந்த பிரச்சினைக்கு அமைவாகவே இத் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய நபர் இன்று அதிகாலை துப்பாக்கியுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரை இன்று களுத்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Related posts

வெளியேறவோ உட் பிரவேசிக்கவோ முற்றாக தடை

wpengine

அரச வெசாக் நிகழ்வுகள் இம்முறை யாழ்ப்பாணத்தில்

wpengine

நாட்டில் தற்போது பரவுவது மிக வல்லமை கொண்ட வைரஸ்

wpengine