உலக செய்திகள்

திமிங்கல வேட்டை – மீண்டும் தொடங்குகிறது ஜப்பான்…


ஜப்பானில் வர்த்தக அடிப்படையிலான திமிங்கல வேட்டை மீண்டும் அடுத்த வருடம் ஜூலை மாதத்தில் ஆரம்பிக்கவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கடலோர கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பல நூற்றாண்டுகளாக திமிங்கல இறைச்சியை விரும்பி சாப்பிட்டாலும், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகே அதன் நுகர்வு அதிகரித்தது.

அதேவேளை, அறிவியல் ஆராய்ச்சிக்காக ஜப்பான் அரசு குறிப்பிடத்தக்க அளவுக்கு திமிங்கலங்களை வேட்டையாடி பின்னர் அதன் இறைச்சி விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திமிங்கல வேட்டையில் ஈடுபடக்கூடாது என்று சர்வதேச நீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இந்நிலையில், அடுத்த வருடம் ஜூலை மாதத்தில் இருந்து வர்த்தக அடிப்படையில் திமிங்கல வேட்டையை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக ஜப்பான் அறிவித்துள்ளது.

வர்த்தக அடிப்படையிலான திமிங்கல வேட்டைக்கு சர்வதேச திமிங்கல வேட்டை தடுப்பு ஆணையம் (ஐடபுள்யூசி) தடை விதித்துள்ளது.

எனவே, அந்த ஆணையத்தில் இருந்து விலகி விட்டு, திமிங்கல வேட்டையைத் தொடங்க ஜப்பான் திட்டமிட்டுள்ளது. திமிங்கல இறைச்சி சாப்பிடுவது தங்கள் கலாச்சாரத்தின் ஒரு அங்கம் என்றும் ஜப்பான் அதிகாரிகள் கூறுகின்றனர்.

Related posts

தென்கொரியா தொடர் மாடிக் கட்டிடத்தில் பாரிய தீ

wpengine

ஈஸ்டர் தாக்குதல் – புலஸ்தினி மகேந்திரன் உயிரிழந்தார்

News Editor

ஹெட்டிபொல சிறுமியின் மரணம் தொடர்பில் சந்தேக நபர் கைது

Azeem Kilabdeen