உலக செய்திகள்

பேரூந்து – லொரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 50 பேர் உயிரிழப்பு…


காங்கோ குடியரசு நாட்டில் லொரியுடன் பேரூந்து நேருக்கு நேர் மோதிய விபத்தில் 50-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மத்திய ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான காங்கோ குடியரசு நாட்டில் சாலைகள் மற்றும் போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் சாலை விபத்துகள் பெருகி வருகின்றன.

இந்த விபத்தில் 50-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததாகவும், படுகாயங்களுடன் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

சிகிச்சை பெற்றுவரும் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Related posts

இந்தியாவில் இரண்டாயிரத்தை தாண்டிய கொரோனா உயிரிழப்புகள்

wpengine

அமெரிக்க விமானப்படை தாக்குதலில் அல் கொய்தா மூத்த தலைவர் பலி.

wpengine

காஸாவில் தினசரி குழந்தைகள் இறப்பு 160 ஆக உயர்வு – ஐக்கிய நாடுகள் சபை..!

wpengine