உள்நாட்டு செய்திகள்

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை…


வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் குறிப்பாக பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வானிலை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலலும் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள் என்று அந்த அறிக்கையில மேலம் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

அனைத்துக் கட்சி அரசாங்கம்: ஜனாதிபதியை எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஐக்கிய மக்கள் சக்தி சந்திக்கிறது

wpengine

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு

wpengine

அரசிலிருந்து வெளியேற முன்னணி குழுவொன்று நியமிப்பு…

wpengine