உலக செய்திகள்

இந்தோனேசியாவை தாக்கிய சுனாமி- உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு…


இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 281 ஆக உயர்ந்துள்ளதாக சர்வ்தேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சுமார் 65 அடி உயரத்தில் (20 மீட்டர்) ஏற்பட்ட சுனாமி அலைகள் நூற்றுக்கணக்கான வீடுகள், கட்டிடங்களை அழித்து தரைமட்டமாக்கின. சாலைகள், ஓட்டல்களுக்குள் கடல்நீர் புகுந்ததால் மக்கள் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.

நேற்று மாலை நிலவரப்படி சுனாமியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 222 என்ற நிலையில் இருந்தது. இன்று காலை நிலவரப்படி உயிரிழப்பு 281 ஆக உயர்ந்துள்ளது.

ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் இராஜினாமா…

wpengine

ரஷ்ய படையினரின் வான்வெளி தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 53 ஆக உயர்வு…

wpengine

2G லைசென்ஸ் இரத்து – ரூ.1,000 கோடி இழப்பீடு கேட்கிறது தொலைபேசி நிறுவனங்கள்…

wpengine