உள்நாட்டு செய்திகள்

இடைக்கால கணக்கு அறிக்கை நிதி அமைச்சரால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு… (UPDATE)


புதிய அரசாங்கத்தின் இடைக்கால கணக்கு அறிக்கை சற்று முன்னர் பாராளுமன்றத்தில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர வால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

————————————————————(UPDATE)

புதிய அரசாங்கத்தின் இடைக்கால கணக்கு அறிக்கை இன்று(21) பாராளுமன்றில்..

புதிய அரசாங்கத்தின் இடைக்கால கணக்கு அறிக்கை இன்று(21) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டம் அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

புதிய அரசாங்கத்தை அமைக்க முடியாமல் போயிருந்தால் அடுத்த ஆண்டு அரச ஊழியர்களுக்கான சம்பளம், உர நிவாரணம், சமுர்த்தி நிவாரணங்கள் முதலானவற்றை வழங்க முடியாமல் போயிருக்கும் என குறிப்பிட்ட அமைச்சர் அடுத்த வருடத்தின் முதல் மாதத்தில் அரச செலவினங்களுக்காக ஆயிரத்து 765 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related posts

வீட்டிலிருந்து சிகிச்சை பெற புதிய வழிமுறைஅறிமுகம்

wpengine

பாதை விதிகளை மீறுவோருக்கான தண்டப்பணம் ரூபா.25,000 ஆக அதிகரிக்க வேண்டும் – ராஜித

wpengine

தென்னாபிரிக்கா அணியின் பிரபல வேகப்பந்து வீச்சாளருக்கு கிரிக்கெட் விளையாடத் தடை..

wpengine