உள்நாட்டு செய்திகள்

ஹெரோயினுடன் மூவர் கைது…



நாட்டின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோத போதை பொருள்களுடன் நேற்று(16) மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய கல்கிஸ்ஸ கல்தேமுல்லை பகுதியில் 20 கிராம் ஹெரோயினுடன் 41 வயதுடைய நபர் ஒருவரும், குருநாகல் – வீதியவத்தை பகுதியில் 3 கிராம் ஹெரோயினுடன் 23 வயதுடைய இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்

அக்மீமன கெசல்கஸ்ஹேன பகுதியில் 10 கிராம் ஹெரோயினுடன் 30 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய பின்னர் நாளை(18) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இருவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல் துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இன்று நள்ளிரவு தொடக்கம் ரயில் வேலைநிறுத்தம்

wpengine

சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்றுக் கொண்ட 2500 பேர் கைது…

wpengine

பொதுஜன பெரமுனவின் புதிய நிர்வாக குழு நியமனம் – நவம்பர் மாதம் கட்சியின் மாநாடு

News Editor