உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.முன்னணியின் பாராளுமன்றக் குழு கூட்டம் இன்று..


ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றக் குழு கூட்டம் இன்று(14) பிற்பகல் 3.00 மணிக்கு அலரி மாளிகையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நேற்றிரவு(13) 7.00 மணிக்கு ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றக் குழு கூட்டம், கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக விதிக்கப்பட்ட இடைக்காலத் தடைக்கு எதிரான மேன்முறையீட்டு மனு தொடர்பில், உயர் நீதிமன்றம் எடுக்கவுள்ள தீர்ப்பின் அடிப்படையில் செயற்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் எதிர்வரும் திங்கட்கிழமை காலிமுகத்திடலில் இடம்பெறவுள்ள பொதுக்கூட்டம் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பாராளுமன்ற கலைப்பு வர்த்தமானிக்கு எதிரான மனுவை விசாரணை செய்ய உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை – சட்டமா அதிபர்..

wpengine

இலங்கையின் 45’வது பிரதம நீதியரசராக பிரியசாத் டெப் நியமனம்…

wpengine

உடுவே தம்மாலோக தேரருக்கு பிணையில் செல்ல அனுமதி

wpengine