உள்நாட்டு செய்திகள்

பெருந்தோட்ட தொழிலாளர்களது ரூ.1000 கோரிக்கைக்கான பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது…



பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபா அடிப்படை சம்பளத்தை வலியுறுத்தி கடந்த 8 நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த பணிப்புறக்கணிப்பு நேற்று (11) நள்ளிரவோடு கைவிடப்பட்டுள்ளதாக, இலங்கை தொழிலாளர் காங்ரஸின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 19 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையில் இடம்பெற இருக்கின்ற கலந்துரையாடலின் போது நல்லதொரு தீர்வினை ஜனாதிபதி பெற்றுக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுவதாக ஆறுமுகன் தொண்டமான் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

பாராளுமன்றம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் விசேட பாதுகாப்பு…

wpengine

இலங்கையைில் முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்படுவது தவறு – துருக்கித் தூதுவர் எச்சரிக்கை

wpengine

நல்லாட்சியில் அர்ஜுன் மகேந்திரனுக்கு முக்கிய உயர் பதவி

wpengine