ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

உயர் நீதிமன்றம் வெளியிடவுள்ள தீர்ப்பினை முன்கூட்டியே கம்மன்பில தெரிவிப்பு.. – விரைவில் பொதுத் தேர்தல்..



உயர் நீதிமன்றம் வெளியிடவுள்ள தீர்ப்புக்கு அமைய விரைவில் பொதுத் தேர்தல் நடைபெறும் சாத்தியமுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரித்துள்ளார்.

நேற்று(06) உயர் நீதிமன்ற வளாகத்திற்கு முன்னால் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

“.. எதிர்வரும் 14ஆம் திகதி முதல் நீதிமன்றங்களுக்கான வருடாந்த விடுமுறை ஆரம்பிக்கப்படவுள்ளது. அதற்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைத்தமை தொடர்பிலான மனு மீதான விசாரணையின் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.

தீர்ப்பினை விரைவாக வழங்கவில்லை என்றால் நாடு பாரிய ஆபத்தான நிலைமைக்கு தள்ளப்படும். அவ்வாறான பாவ செயலை உச்ச நீதிமன்றம் நாட்டிற்கு செய்யும் என நான் நினைக்கவில்லை.. நீதிமன்ற தீர்ப்பு தொடர்பில் நீதிமன்ற சட்டதரணிகள் வெளியிட்ட கருத்திற்கு அமைய, பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கிறேன்..”

Related posts

கிரிக்கெட்டின் தோல்வியில் பொறுப்புக் கூற வேண்டியவர் குறித்து தயாசிறி பாராளுமன்றில் தெரிவிப்பு…

wpengine

உலகக் கிண்ண இந்திய குழாமில் உள்ள ராயுது ஓய்வு..

wpengine

சமயச் சின்னங்களை அணிந்தால் வேலை நீக்கம்

wpengine