உலக செய்திகள்

சீன தொலை தொடர்பு நிறுவன அதிபர் மகள் கைது…


சீனாவை சேர்ந்த பிரபல பன்னாட்டு தொலை தொடர்பு நிறுவனம் ஹூவாய். இந்த நிறுவன அதிபர் ரென் ஜெங்பெய். இவரது மகள், மெங்வான்ஜவ் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் அந்த நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ஆவார். இவர் கனடா நாட்டில் வாங்கூவர் நகரில் கடந்த முதலாம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார். இதுபற்றிய தகவலை இப்போதுதான் கனடாவின் நீதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அவரை தங்கள் நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. எனவே அவர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுகிறார் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில் மெங்வான்ஜவ் எதற்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்பது பற்றிய கூடுதல் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

Related posts

ஆங் சான் சூச்சிக்கு வழங்கிய கௌரவ குடியுரிமையை திரும்பப் பெறுகிறது கனடா…

wpengine

Tik Tok உள்ளிட்ட 59 செயலிகளுக்கு தடை

wpengine

43 ஆண்டுகளுக்கு பிறகு கொல்கத்தா- பங்களாதேஷ் இடையே பயணிகள் ரெயில் சேவை..

wpengine