உலக செய்திகள்

அமெரிக்காவில் கட்டிடத்தின் மீது விமானம் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு…


அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் சிறியரக விமானம் ஒரு கட்டிடத்தின் மீது மோதிய விபத்தில் விமானி உட்பட இருவர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள ஹில்லியார்ட் நகரை நோக்கி நேற்று பிற்பகல் ஒரு செஸ்னா 335 ரக சிறிய விமானம் புறப்பட்டு சென்றது.

சிறிது தூரம் சென்றதும் வழியில் நிலைதடுமாறி, மிகவும் தாழ்வாக பறந்த அந்த விமானம் ஃபோர்ட் லாடெர்டேல் நகரில் மனஇறுக்கம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான பயிற்சி மையம் அமைந்துள்ள ஒரு கட்டிடத்தின்மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் விமானம் முழுவதும் தீபிடித்து எரிந்து சாம்பலானதில் இருந்த விமானி மற்றும் ஒரு பயணி இருவரும் சம்பவ இடத்திலேயே கருகி உயிரிழந்தனர். அங்கிருக்கும் பயிற்சி மையத்தை சேர்ந்த ஒரு ஆசிரியர் இந்த விபத்தில் காயமடைந்தார்.

Related posts

பாகிஸ்தானில் இருந்து யாரும் ஜிஹாத் போராட்டத்திற்காக செல்ல வேண்டாம் – இம்ரான்

wpengine

அமெரிக்காவை வதைக்கும் காட்டுத்தீ

wpengine

அமெரிக்கா எங்களை குறைத்து மதிப்பிட்டுள்ளது – Huawei

wpengine