உள்நாட்டு செய்திகள்

மிஹின் லங்கா மற்றும் ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் – ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு…


மிஹின் லங்கா விமான சேவை மற்றும் ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை, வரையறுக்கப்பட்ட ஶ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனம் ஆகியவற்றில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி இந்த கால நீடிப்பை வழங்கியுள்ளார்.

இந்நிலையில் அந்தக் காலம் பெப்ரவரி 15ம் திகதிவரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே 2018 ஜூலை மாதம் 31 ஆம் திகதி நிறைவடையவிருந்த காலம் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டிருந்தது.

2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதியில் இருந்து இவ்வருடம் ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், குறித்த நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணை செய்வதற்காகவே இந்த ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இதுவரை 1602 பேர் பூரண குணம்

wpengine

20வது அரசியலமைப்பு – ஐவர் கொண்ட குழு நியமனம்

wpengine

ரவி கருணாநாயக்கவின் அமைச்சுப்பதவி மங்கள சமரவீரவுக்கு…

wpengine