உள்நாட்டு செய்திகள்

பெறுமதியான தங்கத்துடன் இருவர் கைது…


சட்டவிரோதமான முறையில் தங்க நகைகளை மாலைத்தீவில் இருந்து கொண்டு வர முயற்பட்ட இரண்டு பேர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 3,148,810 ரூபா 233 கிராம் எடையுடைய பெறுமதியான தங்க பிஸ்கட்கள் இரண்டும் தங்க மாலைகள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு பகுதியை சேர்ந்த 30 வயதுடைய ஒருவரும் 46 வயதுடைய மாலைத்தீவு பிரஜை ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஐக்கிய தேசிய கட்சியின் 71ம் ஆண்டு நிறைவு ஒத்திவைப்பு..

wpengine

எனது திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றன – மஹிந்த ராஜபக்ஷ

wpengine

அரச கணக்காய்வாளர் பிணை முறி ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்..

wpengine