உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி சாதாரணதரப் பரீட்சை ஆரம்பம்…


2018 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 03 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை இடம்பெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

4 ஆயிரத்து 661 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ள இந்தப் பரீட்சையில் 4 லட்சத்து 22 ஆயிரத்து 850 பாடசாலை பரீட்சார்த்திகள் பங்கேற்க உள்ளனர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2 லட்சத்து 33 ஆயிரத்து 791 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் சாதாரணதரப் பரீட்சையில் பங்கேற்க உள்ளனர்.

இதேவேளை, ரத்மலானை, தங்காலை, மாத்தறை, சிலாபம், கொழும்பு மற்றும் மகஸின் சிறைச்சாலை என்பனவற்றில் விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாடளாவிய ரீதியில் உள்ள சகல முஸ்லிம் பாடசாலைகளும் நாளை ஆரம்பம்..

wpengine

புளூமெண்டல் சங்கா 22ஆம் திகதி வரை விளக்கமறியலில்

wpengine

நான் தான் குடும்பத்தில் அப்பாவி; கோட்டாபய கருத்துக்கு பதிலடி [VIDEO]

wpengine