உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு சபாநாயகர் எடுத்த தீர்மானம் சட்ட விரோதமானது – மனு ஒத்திவைப்பு…


கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு சபாநாயகர் எடுத்த தீர்மானம் சட்ட விரோதமானது என உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 04ம் திகதி விசாரணைக்கு அழைக்க உயர் நீதிமன்ற பிரதம நீதியரசர் நளின் பெரேரா உள்ளிட்ட நீதியரசர்கள் குழாம் இன்று(23) தீர்மானித்துள்ளது.

பாராளுமன்றத்தை கலைப்பதற்கு வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களின் விசாரணை நாளான எதிர்வரும் 04, 05, 06 ம் திகதிகளில் இந்த மனுவை விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவின் பிரதிவாதிகளாக சபாநாயகர், சட்ட மா அதிபர் மற்றும் பாராளுமன்ற செயலாளர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மாத்தறை பிரதேச பாடசாலை அறையொன்றில் இருந்து பல வெடிபொருட்கள் மீட்பு..!

wpengine

பலாலி விமான நிலையத்திலிருந்து சென்னைக்கான விமான சேவை எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பம்..!

wpengine

பிரதி​ பொலிஸ்மா அதிபருக்கு பதவி உயர்வு

wpengine