உள்நாட்டு செய்திகள்

பிள்ளையானின் வழக்கு தொடர்ந்தும் ஒத்திவைப்பு…



கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானின் உண்மை விளம்பல் விசாரணை  பெறப்பட்டு, எதிர்வரும் ஜனவரி மாதம் 9ஆம் திகதி வரையும் வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிள்ளையான், நேற்று (21) விடுதலை செய்யப்படுவார் என்ற பலத்த எதிர்பார்ப்புடன், மட்டக்களப்பு நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு முன்னால் கட்சி உயர்பீட உறுப்பினர்கள், பொதுமக்கள், ஆதரவாளர்கள் காத்திருந்த நிலையிலேயே, மீண்டும் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை சம்பவத்தில், குற்றம் சுமத்தப்பட்டு, கடந்த 2015ம் ஆண்டு பிள்ளையான் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித்தலைவர் அப்ரிடி ஓய்வு..

wpengine

அலோசியஸ் எனக்கும் பணம் வழங்கினார் – பொன்சேகா…

wpengine

அனுமதிச் சீட்டு இன்றி இ.போ.ச பஸ்களில் பயணிப்பவர்களுக்கு விதிக்கப்படும் தண்டப்பணம் அதிகரிப்பு..

wpengine