உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி தலைமையில் சர்வகட்சிக் கூட்டம் ஆரம்பம்… (UPDATE)


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் சந்திப்பிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனைத்து கட்சி உறுப்பினர்களும் வருகை தந்துள்ளதை அடுத்து தற்போது கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

———————————-(UPDATE)

அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை…

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் பங்குபற்றுதலுடன் சர்வ கட்சி சந்திப்பொன்று தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதி, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்துள்ளனர்.

சபாநாயகர் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினர் இந்த சந்திப்பிற்கான ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மலேரியா நோயை இனங்காணுவதற்கு விசேட செயற்றிட்டம் ஆரம்பம்…

wpengine

அரிசிக்கான விலை நீக்க வர்த்தமானி

wpengine

உதயங்கவை கைது செய்ய FCID சமர்ப்பித்த மனு நீதிமன்றால் நிராகரிப்பு

wpengine