உலக செய்திகள்

புகையிரத விபத்தில் ஒரே நாளில் 12 பேர் உயிரிழப்பு…


மும்பையில் புகையிரத தண்டவாளங்களை கடந்தபோதும், கவனக்குறைவாக பயணித்தபோதும் புகையிரதத்தில் மோதுண்டு ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மக்கள் தொகை அதிகம் உள்ள மும்பை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று மட்டும் 12 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வருடம் மும்பை மற்றும் புறநகர்ப் பகுதியில் மொத்தம் 3014 பேர் புகையிரதத்தில் அடிபட்டு இறந்ததாக, தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுவிற்கு புகையிரத காவல்துறை பதில் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

முப்பது ஆண்டுகளில் இல்லாத கடும் மழை

wpengine

சர்ச்சைக்குரிய பயணத்தடை உத்தரவின் ஒரு பகுதியை உச்சநீதிமன்றம் அனுமதித்தது..

wpengine

வீடியோ கேம் போட்டியில் தோல்வி அடைந்ததால் துப்பாக்கிச் சூடு – 4 பேர் பலி…

wpengine