உள்நாட்டு செய்திகள்

வந்தாறுமூலை வளாக கல்வி நடவடிக்கைகள் இன்று(09) முதல் தற்காலிகமாக இடைநிறுத்தம்..


சீரற்ற வானிலை காரணமாக, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்தின் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக பதில் பதிவாளர் அ.பகிரதன் இன்று(09) தெரிவித்தார்.

கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடை மழையினால், போக்குவரத்து தடைப்பட்டதன் காரணமாக மாணவர்களின் வருகை குறைவாக காணப்படுவதாகவும், மழை நீர் பல்கலைக்கழக வளாகம் மற்றும் விடுதியில் தேங்கி நிற்பதனால் மாணவர்கள் பலவேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

மாணவர்களுக்கான பரீட்சைகள் நடைபெற்று வந்த நிலையில், சீரற்ற வானிலை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக அவர்கள் குறித்த நேரத்துக்கு சமூகமளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ள ஆகிய, குறித்த காரணங்களின் அடிப்படையில், கிழக்குப் பலக்லைக்கழக வந்தாறுமூலை வளாகத்தின் கல்வி நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Related posts

மேலும் 04 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

wpengine

அர்ஜுனவின் மருமகனினது நிறுவனம் மோசடியில் ஈடுபட்டது நிரூபணமானால் அரசுடமையாக்கப்படும்…

wpengine

EPF ஊடாக கடன் பெறும் சலுகை வரவு செலவு திட்டத்தில் நீக்கம்..?

wpengine