உள்நாட்டு செய்திகள்

தேர்தல் சட்டங்களை மீறிய 21 வேட்பாளர்களுக்கு எதிராக வழக்கு – பொலிஸ் தலைமையகம்



பாராளுமன்றப் பொதுத் தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்பட்டதாகக் கூறப்படும் 21 வேட்பாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடர பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இந்த வேட்பாளர்களில் 15 பேருக்கு எதிராக ஏற்கனவே நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. மேலும் ஆறு பேருக்கு எதிராக எதிர்வரும் நாட்களில் வழக்குத் தொடரப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்பட்ட அரசியல்வாதிகளின் ஆதரவாளர்கள் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் சட்டங்களை மீறிய வேட்பாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து தேர்தலுக்கு முன்னதாக சட்ட நடவடிக்கை எடுக்கத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என தேர்தல்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்; தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் பதிவான முறைப்பாடுகளில் அதிகமானவை சிறு சம்பவங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

(riz)

 

Related posts

குற்றச்சாட்டுக்களை மறுக்கும் லிற்றோ எரிவாயு நிறுவனம்

wpengine

பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் மதிய உணவு

wpengine

சுதந்திர கட்சி மத்திய குழுவை கூட்ட ஜனாதிபதிக்கு கோரிக்கை

wpengine