உள்நாட்டு செய்திகள்

அரசியலமைப்பிற்கு உட்பட்ட வகையிலேயே 14ம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ளது – கெஹெலிய..


எதிர்வரும் 14ம் திகதி கூடவுள்ள பாராளுமன்ற அமர்வானது அரசியலமைப்பிற்கு அனுவ சட்ட ரீதியான ஒன்றே என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று(07) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

மேலும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கருத்துத் தெரிவிக்கையில்;

“.. எதிர்வரும் 14ஆம் திகதிக்கு முன்னர் அமைச்சரவைக்கான அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளும் பணி நிறைவடையும். இதற்கான வர்த்தமானி அறிப்பு எதிர்வரும் 14ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் அதனடிப்படையில் பாராளுமன்றத்தில் ஆசன ஒதுக்கீட்டு நடவடிக்கைகள் இடம்பெறும்..” எனவும் தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த 04ம் திகதி பாராளுமன்றத்தினை கூடுவது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நதிமல் பெரேரா மற்றும் இன்னுமொருவர் கட்டுநாயாக்க ஊடாக தாயகத்திற்கு…

wpengine

கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் வெட்டு

wpengine

பசில் இனது மல்வானை காணி மற்றும் வீடு குறித்த வழக்கு ஒத்திவைப்பு.

wpengine