உள்நாட்டு செய்திகள்

கேரளா கஞ்சாவுடன் மூன்று பேர் கைது…


கேரள கஞ்சாவை கொண்டு சென்ற மூன்று சந்தேக நபர்கள் வவுனியா – ஓமந்தை பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் தலைமையக விசேட போதைப்பொருள் தடுப்பு பிரிவிற்கு நேற்று கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில், மேற்கொண்ட பரிசோதனையில் அவர்களிடமிருந்து ஒரு கிலோ 126 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்மாந்துறை பகுதியை சேர்ந்த 24 மற்றும் 29 வயதான இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

நாட்டின் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

Azeem Kilabdeen

வைத்தியசாலையில் இருந்து சீனப்பெண் விடைபெற்றார்

wpengine

இம்மாதத்திலிருந்து அரச ஊழியர்களுக்கான ரூ.2000 சம்பள உயர்வு

wpengine