உலக செய்திகள்

சீனாவில் வாகன விபத்தில் 14 பேர் உயிரிழப்பு,..


சீனாவின் அதிவேக வீதியில் உள்ள சுங்கச்சாவடி அருகே சரக்கு லாரி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் எதிரே வந்த கார் உள்ளிட்ட வாகனங்களின் மீது அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிசார் மற்றும் மீட்புப்படையினர் விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

நியூசிலாந்து வட கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…

wpengine

கொங்கோவில் படகு கவிழ்ந்து விபத்து – 11 பேர் உயிரிழப்பு

wpengine

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் காலமானார்…

wpengine