உள்நாட்டு செய்திகள்

நாட்டின் இன்று பெரும்பாலான பிரதேசங்களில் மழை…


நாட்டின் இன்று(01) பெரும்பாலான பிரதேசங்களில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ஹம்பாந்தோட்டை முதல் மட்டக்களப்பு வரை மற்றும் மன்னார் தொடக்கம் புத்தளம் வரையிலான கடற்பிராந்தியங்களில் அதிகளவிலான காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மணித்தியாலத்திற்கு 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் அதிகரித்த வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் கடல் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல், ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன்காரணமாக, மீனவர்கள் மற்றும் கடல்சார் தொழிலில் ஈடுபடுவோரை அவதானமாக செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணகை்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts

மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடுக்குத் தீர்வு…

wpengine

கஞ்சாவுடன் இரண்டு பேர் கைது

wpengine

கடும் பனிமூட்டம் – விமானங்கள் மத்தலயில் தரையிறக்கம்

wpengine