உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாலக சில்வா மற்றும் நாமல் குமாரவின் குரல்களே தொலைபேசி உரையாடலில் உள்ளதென CID தெரிவிப்பு…


இலங்கை அரச தலைவர்களை கொலை செய்வது தொடர்பிலான தொலைபேசி உரையாடலில் இருப்பது, முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா மற்றும் ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமார ஆகியேரின் குரல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இன்று(23) கோட்டை நீதிவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா மற்றும் ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமார ஆகியேரின் தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய 123 ஒலிப்பதிவுகள் இவ்வாறு உறுதி செய்யப்பட்டுள்ளன.

நீதிமன்ற உத்தரவுப்படி முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா மற்றும் ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமார ஆகியேரின் குரல் மாதிரிகள் அரச இராசயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

Update – பாராளுமன்ற அமர்வுகள் மதிய போசனத்திற்கு பின்னர் ஆரம்பம்..

wpengine

ஜனாதிபதி மற்றும் பிரதமரால் நாளை நாடாளுமன்றில் விசேட உரை

wpengine

2024 வரவு செலவுத் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்..!

wpengine