உள்நாட்டு செய்திகள்

ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு ஒத்திவைப்பு…


முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 05 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(22) உத்தரவிட்டுள்ளது.

பிரதான நீதவான் ரங்க திஸாநாயக்க இன்று(22) நீதிமன்றத்திற்கு வராத காரணத்தினால் குறித்த வழக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு பதில் நீதவான் பிரியந்த லியனகே இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

பிணைமுறி ஆணைக்குழுவின் முன்னிலையில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க பொய் சாட்சி கூறியதாக இரகசிய பொலிஸாரினால், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நாடாளுமன்ற அதிகாரிகள் அறைக்குள் பிரவேசிக்க விஷேட ஆடைக் கட்டுப்பாடு…

wpengine

ஐ.ம.சக்தியின் 8 எம்.பி.க்களுக்கு அமைச்சர் பதவிகள்?

wpengine

இந்தியாவின் நன்கொடை மருந்துப் பொருட்கள் நாட்டை வந்தடைந்தது

wpengine