உள்நாட்டு செய்திகள்

மாத்தறை – ஊருபொக்க துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு..


மாத்தறை – ஊருபொக்க ஹூலங்கந்தை – தம்பஹல பகுதியில் இன்று(22) காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 44 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பஸ்கொட பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் மோட்டார்சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளையில், மற்றுமொரு மோட்டார்சைக்கிளில் வந்த ஒருவர் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு தலைமறைவாகியுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் ஹீகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Related posts

இலங்கை அணியை உற்சாகப்படுத்த பெண்களை களமிறக்குகிறது இலங்கை கிரிக்கெட் வாரியம்..?

wpengine

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் இலங்கைத் தமிழர்கள் 10 பேர் உண்ணாவிரதத்தில்…

wpengine

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அழைத்து செல் – கையெழுத்து வேட்டை

wpengine