உள்நாட்டு செய்திகள்

மாளிகாவத்தையில் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்…


மாளிகாவத்தையில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் 23 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதுடன், காயமடைந்த இளைஞர் தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 12 ஆம் திகதி மாளிகாவத்தை – லக்சன பிரதேசத்தில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த இளைஞரே இவ்வாறு மீண்டும் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

மத்திய ஆளுநர் வௌியிட்ட மகிழ்ச்சிகர செய்தி

News Editor

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட சலுகைகள்

wpengine

உணவு ஒவ்வாமை காரணமாக 70 பேர் வைத்தியசாலையில்…

wpengine