உலக செய்திகள்

ரயில் விபத்து – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக அதிகரிப்பு…


அமிர்தசரசில் நடைபெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது

பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் தசரா விழா கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது

ராவணன் கொடும்பாவி தீயிட்டு எரிக்கப்பட்டதை ரயில்வே தண்டவாளம் அருகே நின்றவாறு பலர் தங்களது கைபேசிகளில் பதிவு செய்தனர்.

அப்போது ஜலந்தர் நகரில் இருந்து அமிர்தசரஸ் நோக்கி வேகமாக சென்ற ரயில் அங்கு திரண்டிருந்த மக்கள் கூட்டத்தின்மீது வேகமாக மோதியதில் 50 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக முதல் கட்டமாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 50 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

புகையிரதத்தில் தீ விபத்து – 20 பேர் உயிரிழப்பு…

wpengine

மீளவும் நியூசிலாந்தில் மீண்டும் ஊரடங்கு

wpengine

சீனாவில், மாமிச நுகர்வைக் கட்டுப்படுத்த சட்டம்

wpengine