உள்நாட்டு செய்திகள்

லலித் மற்றும் அனுஷ ஆகியோரது வழக்கு ஒத்திவைப்பு…


சில் துணிகளை விநியோகம் செய்த சம்பவம் தொடர்பில் சிறைத்தண்டனை பெற்றுள்ள முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட ஆகியோரின் மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் நவம்பர் 26ம் திகதி விசாரணைக்கு எடுப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(19) உத்தரவிட்டுள்ளது.

அன்றைய தினம் வழக்கு தொடர்பாக எழுத்து மூல அறிக்கையை சமர்பிக்க நடவடிக்கை எடுக்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் இரண்டு தரப்பினருக்கும் உத்தரவிட்டுள்ளது.

2015ம் ஆண்டு தொலைத் தொடர்பு ஆணைக்குழுவுக்கு சொந்தமான 600 மில்லியன் ரூபாவை பயன்படுத்தி சில் துணிகளை விநியோகம் செய்த சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட இருவருக்கும் கடுமையான உழைப்புடன் மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஊழல் ஒழிப்பு சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

Azeem Kilabdeen

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் குறித்து பரிந்துரை செய்ய விசேட குழு…

wpengine

இந்தியாவுக்கு 26 ஓட்டங்களால் வெற்றி…

wpengine