கேளிக்கை

மேகன் மார்கல் தாய்மை அடைந்துள்ளதாக சூசெக்ஸ் அரண்மனை அறிக்கை…


பிரிட்டன் இளவரசர் ஹாரியின் மனைவி கருவுற்றிருப்பதை உறுதிப்படுத்தியுள்ள சூசெக்ஸ் அரண்மனை வரும் வசந்த காலத்தில் புது வரவை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் – டயானா தம்பதியின் இளையமகன் ஹாரி (33). இவருக்கும் மேகன் மார்கலுக்கும் (36) கடந்த மே மாதம் விண்ட்சோர் நகரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், தற்போது மேகன் மார்கல் கருவுற்றிருப்பதை சூசெக்ஸ் அரண்மனை நேற்று(15) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அடுத்த (2019) ஆண்டின் வசந்த காலத்தில் (மார்ச் முதல் மே மாதம் வரை) தங்கள் அரண்மனையின் குட்டி அரச குமாரனை எதிர்ப்பார்ப்பதாக சூசெக்ஸ் அரண்மனை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பிரபல நடிகருடன் ஜோடி சேரும் “எங்க வீட்டு மாப்பிள்ளை” புகழ்…

wpengine

அட்லி இயக்கத்தில் பாகுபலி புகழ்?

wpengine

ஹஜ் விழாவின் இறுதி நிகழ்வில் அமைச்சர் ரிஷாட்…

wpengine