உள்நாட்டு செய்திகள்

ஜேவிபியின் 23ம் திகதியன்று இடம்பெறவுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு பல துறையினரும் ஆதரவு..


மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையில் 23ம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளதாகவும், அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு பல துறையினரும், தொழிற்சங்கங்களும், மீன்பிடி அமைப்புகள், விவசாயிகள் அமைப்புக்கள் மற்றும் மாணவர் சங்கங்கள் என பல தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளதாகவும் ஜேவிபி தெரிவித்துள்ளது.

நாட்டின் பொருளாதாரம் சரிந்துள்ளதாகவும், ரூபாவின் பெறுமதியானது தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருவதாகவும், ஒவ்வொரு மாதமும் எரிபொருள் விலையானது அதிகரிக்கப்படுவதாகவும், இந்நாள் அரசு மக்களுக்கு பலவிதத்திலும் சுமைகளை வழங்கி வருவதாகவும், மக்களுக்கு அர்ப்பணிக்க வந்த நல்லாட்சி அரசின் தலைமைகள் வெளிநாட்டு சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு வருவதாகவும் மக்கள் விடுதலை முன்னணியானது மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

மஹிந்த ஜனாதிபதி ஆணைக்குழு முன்னில்லையில் ஆஜர்

wpengine

எரிபொருள், எரிவாயு குறித்து ஜனாதிபதி விசேட அறிக்கை!

News Editor

கம்பஹாவிற்கும் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம்…

wpengine