உள்நாட்டு செய்திகள்

சபாநாயகர் தலைமையில் நிலையான அபிவிருத்தி இலக்கு தொடர்பில் இரு நாள் விசேட வேலைத்திட்டம்…


நிலையான அபிவிருத்தி இலக்கு தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கை தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று(12) விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட உள்ளது.

நிலையான அபிவிருத்தி இலக்கிற்கான தயார்படுத்தல் மற்றும் ஒன்றிணைத்தல், நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதற்கான மேலதிக உத்திகள், வழிமுறைகள் மற்றும் ஒத்துழைப்புகள் தொடர்பில் அடையாளம் காண்பது இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.

2030 ஆம் ஆண்டு நிலையான அபிவிருத்தி தொடர்பிலான தேர்வுக்குழு , ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் மற்றும் உள்ளக பாராளுமன்ற ஒன்றியத்தினால் குறித்த இந்த வேலைத்திட்டம் இரண்டு நாட்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

போதைப்பொருள் வியாபாரம் செய்பவர்களை கைது செய்யாமல், மாணவர்களின் பைகளை சோதனை செய்வது வேடிக்கையானது..!

wpengine

சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவுக்கான இடைக்கால தடையுத்தரவு நீடிப்பு

wpengine

அரச அலுவலகங்களில் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ள தடை

wpengine