உள்நாட்டு செய்திகள்

அலி ரொஷான் உள்ளிட்ட ஏழு பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபரால் வழக்குத் தாக்கல்…


சட்ட விரோதமான திட்டங்களில் ஈடுபடுகின்ற அலி ரொஷான் என அறியப்படும் நிராஜ் ரொஷான் உள்ளிட்ட ஏழு பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபரால் கொழும்பு விஷேட மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வனஜீவராசிகள் திணைக்களத்தின் முன்னாள் பிரதிப் பணிப்பாளரான உபாலி பத்மசிறி மற்றும் யானைகளை பதிவு செய்யும் ஆவணங்களுக்கு பொறுப்பாக இருந்த பிரியங்கா சஞ்சீவனி ஆகியோரும் அந்த எழுவரில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுமதிப் பத்திரம் இன்றி யானைத் தந்தங்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் அலி ரொஷான் உட்பட எழு பிரதிவாதிகளுக்கு எதிராக பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் 24 குற்றச்சாட்டுக்களில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கு வகுப்புத் தடை…

wpengine

பாராளுமன்ற குழப்ப நிலை தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம்..

wpengine

பொலிஸாரை விலாசித்தள்ளிய எம்.பிக்கள்!

wpengine