உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி – சீஷெல்ஸின் உப ஜனாதிபதி சந்திப்பு…


சீஷெல்ஸ் நாட்டிற்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் சீஷெல்ஸின் உப ஜனாதிபதி வின்சன்ட் மெரிடனுக்கும் (Vincent Meriton) இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று(09) சீஷெல்ஸின் பிராஸ்லின் தீவில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது ஜனாதிபதிக்கு சீஷெல்ஸ் உப ஜனாதிபதி அமோக வரவேற்பு அளித்தார்.

இலங்கைக்கும் சீஷெல்ஸுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 30 வருடங்கள் நிறைவடையும் இந்த சந்தர்ப்பத்தில் இடம்பெற்றுள்ள ஜனாதிபதியின் விஜயம் குறித்து, சீஷெல்ஸின் உப ஜனாதிபதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இந்த விஜயத்தின்போது ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட புதிய உடன்படிக்கைகளை இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் வகையில் பலமாக முன்நோக்கி கொண்டு செல்ல தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பினை நினைவுகூரும் வகையில் நினைவுப் பரிசில்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

இலங்கை – கம்போடியா வர்த்தக மாநாடு

wpengine

வங்க கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சியினால் இலங்கைக்கும் புயல் தாக்கம்..?

wpengine

ஜனவரி-8ம் திகதி பெற்ற வெற்றியை பாதுகாக்கவே கூட்டணி உருவாக்கம் – அர்ஜுன ரணதுங்க

wpengine