உலக செய்திகள்

அரசுப்படைகள் நடத்திய தாக்குதலில் 52 பேர் உயிரிழப்பு…


எகிப்து நாட்டின் சினாய் பகுதியில் அரசுப்படைகள் நடத்திய தாக்குதலில் 52 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

வாகனங்களில் கும்பலாக வரும் பயங்கரவாதிகள் அரசு அலுவலகங்கள் மற்றும் இராணுவத்தினர் மீது அதிரடியாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல்களில் கடந்த 4 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான பொலிசாரும் இராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இப்பகுதியில் பதுங்கியுள்ள அதிபயங்கர தீவிரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கைகளில் எகிப்து இராணுவம் மற்றும் விமானப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் பொலிசார் நடத்திய தேடுதல் வேட்டையில் 26 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், ஆய்தங்க்ள் பறிமுதல் செய்யப்பட்டன என பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.

Related posts

பிலிப்பைன்ஸ் அனர்த்தத்தில் பலியானோர் எண்ணிக்கை 50ஆக உயர்வு..

wpengine

கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு

wpengine

சிலியில் சாலை விபத்தில் 09 பேர் உயிரிழப்பு…

wpengine