உள்நாட்டு செய்திகள்

இன்றும் நாளையும் மழையுடன் கூடிய காலநிலை…



தற்போது நாடு முழுவதும் காணப்படும் மழையுடன் கூடிய காலநிலை இன்றும் நாளையும் மேலும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடமேல், மத்திய, வடமத்திய ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மாகாணத்தின் உள்ளகப் பகுதிகளிலும் சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில பிரதேசங்களிலும் காலை வேளையில் பனிமூட்டம் எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை தற்காலிகமாக நீக்கம்..

wpengine

பாராளுமன்றம் கலைக்கப்படுகிறது…

wpengine

ஊடக சுதந்திர நாளுக்கான கோட்டாவின் செய்தி

wpengine