ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இலங்கை அணியின் எந்தவொரு வீரரும் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபடவில்லை – அல்ஜெசீராவை சாடும் சுமதிபால…


இலங்கை அணியின் எந்தவொரு கிரிக்கெட் வீரரும் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபடவில்லை என இலங்கை கிரிக்கெட் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபால கொழும்பில் நேற்று(04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து தெரிவித்துள்ளார்.

“.. கடந்த பத்தாண்டு காலப் பகுதியில் எந்தவொரு கிரிக்கெட் வீரரும் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதில்லை என்பதனை பொறுப்புடன் கூறுகின்றேன்.

அரசியல் தேவைகளுக்காக கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நாட்டின் கௌரவத்திற்கு இழுக்கு ஏற்படும் வகையில் விளையாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்ட கருத்து கண்டிக்கப்பட வேண்டியது.

கிரிக்கெட் வீரர்கள் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டமைக்கான எந்தவொரு சாட்சியங்களோ, ஆதாரங்களோ சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கோ, இலங்கை கிரிக்கெட்டுக்கோ கிடைக்கவில்லை.

அல் ஜசீரா தொலைக்காட்சி போர் இடம்பெற்ற காலத்திலும் இவ்வாறு நாடு மீது சேறு பூசியது. அதேபோன்று தற்பொழுது கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பில் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றது..” என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தீர்ப்புக்கு முன்னதாக FCID இனை களைக்கத்திட்டமாம்…

wpengine

ஜம்பர் அணியவும் தயார்…

wpengine

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட 7 வயது சிறுமி.

wpengine