ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஞாயிறு அன்று கார்களை இயக்க தடை…


பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மாதம் தோறும் முதல் ஞாயிறு அன்று கார்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐரோப்பிய நாடுகளிலேயே பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தான் காற்று மிக அதிகமாக மாசுபட்டுள்ளதுடன் இதனை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை நகர நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மாதத்தின் முதல் ஞாயிற்றுகிழமையில் முக்கிய பகுதிகளில் கார்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இரு சக்கர வாகனங்கள், மிதி வண்டிகள் மற்றும் சாலையோர நடைபாதை ஆகியவற்றை முதல் ஞாயிறு அன்று மட்டும் பொதுமக்கள் பயன்படுத்தும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனினும், பொருட்கள் விநியோகம் செய்யும்(delivery) வாகனங்கள், மருத்துவ அவசர வாகனங்களுக்கு இந்த தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

காலியில் மைத்திரியின் கூட்டத்திற்குச் சென்றவர்கள், எனக்கு Call எடுத்தனர் – மஹிந்த

wpengine

தேசிய அரசுடன் தொண்டமான் இணைவு..- பிரபல அமைச்சுப் பதவிக்கும் தயார்..

wpengine

நதீஷாவினது புதிய காதலன் ஒரு கிரிக்கெட் பைத்தியமாம்

wpengine