உள்நாட்டு செய்திகள்

சிங்கப்பூர் – இலங்கை வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிரான மனு ஒத்திவைப்பு…


சிங்கப்பூர் – இலங்கை அரசுகளுக்கு இடையே கைச்சாத்திடப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தமானது, அரசியலமைப்பை மீறுவதாக உள்ளது என தீர்ப்பளிக்க கோரி உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள மனுவானது ஜனவரி 09ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு இன்று(04) சிசிர டி ஆப்ரூ, நலின் பெரேரா மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகியோர் உள்ளடக்கிய நீதியரசர்கள் முன் விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

இதன்போது பிரதிவாதி சார்பாக நீதிமன்றில் ஆஜராகும் மேலதிக சொலிசிஸ்டர் ஜெனரல் சஞ்சய ராஜரத்தினம் வெளிநாடு சென்றிருப்பதால் வேறு ஒரு தினத்தில் விசாரிக்குமாறு அவரது கணிஷ்ட சட்டத்தரணி நீதிமன்றில் கோரியிருந்ததை கருத்திற் கொண்டு குறித்த ஒத்திவைப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த மனுவை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உட்பட எட்டு தரப்பினர் இணைந்து தாக்கல் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

குற்றத் தடுப்பு பிரிவில் முன்னிலையானார் சரத் பொன்சேகா

wpengine

இலங்கையில் ஐ.எஸ் ஐ.எஸ் பயங்கரவாதி ஒருவர் செயற்படுவதாக இந்திய உளவுத்துறையை மேற்கோள்காட்டி தகவல்.

wpengine

புதிதாக 124 ஊழியர்களுக்கு கொரோனா

wpengine