ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

நடந்து கொள்ளும் விதம் சரியில்லை… பொலிஸ் குறித்து நம்பிக்கை இல்லாது போயுள்ளது – அமைச்சரவையில் ஜனாதிபதி பொலிஸ்மா அதிபர் குறித்து சீற்றம்…


பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மீது, அண்மைக் காலத்தில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் விமர்சனங்களுக்கு மத்தியில், நேற்று(02) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அவர் மீதான கடுமையான விமர்சனங்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்தாரெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்தோடு, பொலிஸ்மா அதிபரின் நடத்தை, அவரது பதவிக்குப் பொருத்தமற்றதாக மாறி வருகிறது என ஜனாதிபதி கூறினாரெனவும், கூறப்படுகின்றது.

நாட்டில் அதிகரித்து வருவதாகக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பில், நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்பட்டது. இவ்விடயத்தை, உயர்கல்வி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷவே, இவ்விடயம் தொடர்பான தனது கரிசனையை வெளிப்படுத்தினார் என்று கூறப்படுகிறது.

ஆனால், இக்குற்றச்சாட்டை மறுத்துள்ள ரஞ்சித் மத்தும பண்டார, தரவுகளின் அடிப்படையில், குற்றங்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது என்று பதிலளித்துள்ளதோடு, ஊடகங்களால் தான் வேறு விதமாகக் கூறப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

இதன்போது தலையிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யார் என்ன கூறினாலும், பொலிஸ் சேவையின் தரம் குறைவடைந்துள்ளது எனக் குறிப்பிட்டதோடு, பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட ஒட்டுமொத்த பொலிஸ் சேவையும், சீர்திருத்தப்பட வேண்டுமெனக் குறிப்பிட்டுள்ளார்.

தானும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், பொலிஸ்மா அதிபரின் நடத்தைகளால், பொதுமக்களிடத்தில் கெட்ட பெயரைப் பெறுவதாக, ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Related posts

எம்.பி ஒருவரின் முன்னுதாரணம்!!!

wpengine

‘சாரா’ நாடகம் அரங்கேறுகிறதா?

wpengine

அசின் திருமண ஏற்பாடுகள் தீவிரம்!

wpengine